Translate

Advertising

Tuesday, May 13, 2014

Continue...Post-8

பசி வயிற்றைக் கிள்ளியது.பேருந்து நிலையத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடலாம் என சென்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பேருந்து நிலையத்திலும் ஒரு வசந்தபவன்!!! இருக்கும்போல என நினைத்துக்கொண்டேன். 

ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும்போது தான் கீதாவிற்கு போன் செய்ய வேண்டும் என நினைவு வந்தது.

இரண்டு முறை ஃப்புல் ரிங் போனது எடுக்கவில்லை..மூன்றாவது ரிங்கில் எடுத்தாள். என்னை பேசவிடாமல் “டேய்..லூசு மெசேஜ் பண்ணா ரீப்ளே செய்ய மாட்டியா...எத்தன மெசேஜ்...பேலஸ் இல்ல அதான் கால் பண்ண முடியல.....(நான் நினத்திக்கொண்டேன் ஆமா பேலஸ் இருந்தா மட்டும் கால் பண்றமாதிரி !!!...)போடா இனிமேல் என்ட பேசாத போ” என்றாள்.

“ஓய்..சாரி கீதா நான் நல்லா தூங்கிட்டேன்...இப்போதா பார்த்தேன்...அதான் கால் பண்றேன்...சாரி டா “ என்றேன். அதற்குள் டிபன் வந்தது..

பசியை அடக்க முடியவில்லை.சாப்பிட்டுக்கொண்டே பேசினேன்.
அவள், “சரி..சரி..நீ ரீப்ளே செய்யாததால் நான் என்னவோ ஏதோனு நினச்சு பயந்துட்டேன்டா...ரொம்ப ஃப்பீல் பண்னேண்டா..இன்னைக்குதான் நான் உன்மேல் எவ்ளோ பாசம் வச்சிருக்கேனு தெரிஞ்சிக்கிட்டேன்.

இனிமேல் இப்படி பண்ணாத..ஓகேவா..” என அவளது இனிய குரலில் சொன்னாள். இதுவரை அவள் குரலை நான் கவனித்தது இல்லை. இப்பொழுது அவள் குரல்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது.ஏன் என தெரியவில்லை.

அவளது கடைசி மெசேஜ் பற்றி ஏதாவது பேசவாளா என மனம் ஏங்கியது..ஆனால் அவள் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை.

வருத்தமாக இருந்தது..அவளாக அதைப்பற்றி பேசும்வரை நாம் பேசக்கூடாது என இருந்தேன். 
Free Property Classified site