Translate

Advertising

Tuesday, April 29, 2014

Continue...Post-4

“மச்சி..கரக்டா கண்டுபிடிச்சுட..உன்ட ஒன்னு கேட்கனும்டா...நேத்து கீதாவ பார்த்தேன் டா...அவ ரோம்ப அழகா இருக்காடா...

எனக்கு ரோம்ப பிடிச்சுருக்குடா... வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் நினைப்பாகவே இருக்குடா...ஏன் அப்படி இருக்கு” என்றேன்.

அவன் சிரித்துக்கொண்டே ,“டேய்..உனக்கு ஏன்னு தேறியலியா...நடிக்காதடா....சரி விடு...உனக்கு அவள் மேல க்ரஸ் வந்துருக்குனு நினைக்கிறேன்.

பட் அவளுக்கு அப்படி இருக்குமானு தெரியல...மச்சி புதுசா பொண்னுங்ககிட்ட பேசும்போது அப்படித்தான் இருக்கும்...அதுக்காக லவ்னு முடிவு பண்ணிடாத”என்றான். எனக்கு பொக்கென்னு போய்விட்டது....

இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு ஆசை இருக்கத்தான் செய்தது...அவளுக்கு என்னை பிடிக்க வேண்டும் என்று.

பொங்கல் விடுமுறை முழுவதும் நானும் கீதாவும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டோம்.

இருவருக்கும் பிடித்தது,பிடிக்காதது,தெரிஞ்சது தெரியாதது என எல்லாம் பேசினோம்..பல விசயங்களில் எங்களுக்குள் ஒத்துப்போனது.அவளுக்கும் என்னை பிடித்திருக்கும் என நினைத்தேன்.

ஒருநாள் அவள் என் மெசேஜ்க்கு ரீப்ளே செய்யவில்லை...என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..உடனெ போன் செய்தேன்...மெசேஜ் பூஸ்டர் முடிந்துவிட்டது என்றாள்

.உடனே மெசேஜ் பூஸ்டர் போட்டுவிட்டேன்...நீ அந்த அளவிற்கு எனக்கு முக்கியமானவளாய் இருக்கிறாய் என்றேன்.

அவள் ஏன்டா இப்படி பண்ற...இதேல்லாம் வேணாம்...எனக்கு உன் நட்பு இருந்தாள் போதும் என்றாள்.எனக்கு ரொம்ப பெருமையாய் இருந்தது..அவள் என் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என தேன்றியது.எங்களுக்குள் நெருக்கம் அதிகம் ஆனதுபோல் உணர்ந்தேன்.