அவளுக்கு டாட்டா சொல்லி வழி அனுப்பி வைத்துவிட்டு என் பேருந்தில்
அமர்ந்துகொண்டேன்..
அவள் கண்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது..மெய் மறந்து போனேன்..வண்டி
கிளம்பியது...
கீதாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. “ஹாய்...பஸ் ஏறியாச்சா...பார்த்துப்போ“.
மனம் துள்ளிக்குதித்தது..ச என் மேல் எவ்வளவு அக்கறை என நினைத்துக்கொண்டேன்.
என் அம்மா
ஒவ்வொரு தடைவையும் பார்தத்துப்போ என சொல்வாள்..ஆனால் அது பெரிதாய் தேரியவில்லை..ஆனால்
இவள் சொன்னதும் மனம் மகிழ்ச்சி ஆகிறதே என்பதை நினைகும்போது சிரிப்பு வந்தது.
இப்படியே
இருவரும் மாத்தி மாத்தி மெசேஜ் செய்துகொண்டிருந்தோம்.என் பக்கத்தில் இருந்த பெரியவர்
என்னை ரொம்ப நேரமாக கவனித்துக்கொண்டிருந்து.. ”தம்பி என்னப்பா எவ்வளவு நேரம்தான் அந்த
போனை தட்டிக்கிட்டே இருப்ப..இந்த போனுக்கு வாய் இருந்தாளும் அழுதுடும்...கொஞ்சம் ரேஸ்ட்
கொடு..என கடுப்பாய் கூறினார்.
நான் அசடு வழிந்துகொண்டே கோபம் கலந்த குரலில் சரி என்றேன்.
“எவன் இந்த செல்போனை கண்டுபிடிச்சானு..தேரியல..சின்னப்பசங்க கெட்டுக்குட்டிச்செவுறா
போறாங்க என புலம்பிக்கொண்டார்.
இதற்குமேல் போனை யூஸ் பண்ணால் இவரு புடுங்கி தூக்கிப்போட்டாலும்
போட்டுருவாரு என பாக்கெட்டில் போட்டுவிட்டேன்...அப்படியே தூங்கிப்போன்னேன்.
Want to Save Fuel Please Click Here