Translate

Advertising

Thursday, April 24, 2014

Continue......

அந்த நாளும் வந்தது......ரயில்வே ஸ்டேஸனில் கீதாவிற்காக காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு மாதிரியா இருந்தது நாமா இப்படி ஒரு பெண்ணுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்று.

தூரத்தில் ஒரு அழகான பெண் கீதா முகஜாடையில்...ஆம் அது கீதாவேதான்... அசந்து போய்விட்டேன்....கீதாவா இது...இவ்ளோ அழகாக இருப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை...

நல்ல கலர்...சின்ன கண்கள்...நேர்தியான புருவம்..அளவான மூக்கு...ஆரஞ்சு பழம் போல உதடு...நெற்றில் சின்ன ஸ்டிக்கர் பொட்டு....அளவான உடம்பு...நார்மல் ஹைட்....என பார்க்க ஹிரோயின் மாதிரி இருந்தாள். எனக்கு பார்த்ததும் பிடித்துவிட்டது...அடிவயிற்றில் ஏதோ செய்த்தது...ஒரு ரசவாத மாற்றம்.... சொக்கிப்பொனேன். 

நாம் முன்பு பார்த்த கீதாவா இது....என்னாதான் இருந்தாலும் ஆண்களுக்கு அழகின்மீது ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.அவள் மீது அப்போதே காதல்வயப்பட்டேன்.அந்த நொடி இவள் நமக்கு மனைவியாக கிடைத்தாள் எப்படி இருக்கும்? என மனம் ஏங்கியது....

இருவரும் கைகுலிக்கி நலம் விசாரித்துக்கொண்டோம்.முதல் முறையாய் ஒரு பெண்ணின் கையை தொட்டதால்...எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது...அதை வெளிக்காட்டாமல் இருந்தேன்.

வாய் அவசரப்பட்டுவிட்டது“ ஹாய்..கீதா யு சோ பியூட்டிபூல்...ஹீரோயின் மாதிரி இருக்க..”,என்றேன்...அவள் சிறு அதிர்ச்சியுடன்...”ஒய்..ரொம்ப கலாய்க்காத ரகு...நீ மட்டுல் என்னாவாம்...நல்லா ஹிரோ மாதிரி இருக்கா...என்றாள்...அவ்ளோதான் எனக்கு அப்படியே காற்றில் மிதப்பதைபோல் இருந்தது.பிறகு கொஞ்சநேரம் பேசிவிட்டு வீடு போய்சேர்ந்தோம்..


வீட்டிற்கு வந்ததிலிருந்து கீதா ஞாபகமாகவே இருந்தது...எப்பொழுது அவள் மெசேஜ் வரும்,எப்போது பேசலாம்,அவளுக்கு இதேபோல்தான் இருக்குமா?இல்லை நாம்தான் இப்படி இருக்கிறோமா? என ஒரே யோசனையாகவே இருந்தது...நார்மலாகவே இல்லை...ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்த்து..

உடனே வருணுக்கு போன் செய்தேன். “டேய்...மச்சி..பொங்கல் வாழ்த்திக்கள்டா...என்ன பண்ற...என்றேன்.அவன், “டேய்...என்னடா புதுசா இருக்கு வாழ்த்துக்கள் சொல்ற...நாம் என்னைக்குடா இதல்லாம் சொல்லி இருக்கோம்...உண்மைய சொல்லு...என்ன மேட்டர்..சும்மா சொல்லுடா...என்றான்..