காலை 7.30. சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம் திருவிழாக்கோலம் கொண்டிருந்தது.
பொறியியல் கல்லூரிகளூக்கான கலந்தாய்வு நடந்துகொண்டிருந்தது.தன் மகனையோ அல்லது தன் மகளையோ
எப்படியாவது இஞ்சினியர் ஆக்கிவிட வேண்டும்,அப்போதுதான் தங்கள் கஷ்டம் நீங்கும் என்ற
நம்பிக்கையில் ஒவ்வோரு பெற்றோரும் கனுவுகளோடு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
நான் என் சித்தப்பா பையன் கண்ணனுக்காக 9.30 பேட்ஜ்-க்காக வரிசையில்
நின்று கொண்டிருந்தேன்.இதேபோல் இரண்டு வருடங்களூக்கு முன்பு நானும் இப்படித்தான் நின்று
கொண்டிருந்தேன், ஆனால் இப்போது என் தம்பிக்கு கைய்டு செய்கிறேன் -எனக்கு சிரிப்பு வந்தது,காலம்
எவ்வளவு வேகமானது.அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது, என் பள்ளி ஜுனியர் குமார் சென்ற
வருடம் எடுத்த அதெ கல்லூரியை நாம் நம் தம்பிக்கும் எதிர்பார்கிறோம் என்று,உடனே அவனுக்கு
போன் செய்தேன்.
நான், ”ஹலோ,குமார், நான் ரகு பேசறேன்டா,எப்படி இருக்க,உன் காலேஜ்
எப்படிடா,என் தம்பிக்கு எடுக்கலாம்னு இருக்கேன்,நீ என்ன சொல்ற”, மறுமுனையில் சத்தம்
இல்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு மறுமுனையில் பெண் குரல், “ஹலோ,குமார்
இல்ல,நான் அவன் சிஸ்டர் கீதா பேசறேன்,ரகு எப்படி இருக்க?, என்ன ஞபகம் இருக்கா”. எனக்கு
சிறு அதிர்ச்சி, “நான் நல்லா இருக்கேன் கீதா,நீ எப்படி இருக்க,நான் குமார்கூட பேசனும்,ஒரு
டீடெய்ல் வேணும்,அதான் போன் பண்ணேன்” என்றேன்.
அவள், ”கொஞ்ச நாள் முன்னாடி இந்த நம்பர எனக்கு கொடுத்துடான்,நான்
அவன பேச சொல்றேன்” என்றாள். “தேங்க்யூ கீதா, பை” சொல்லி கட் செய்தேன்.
சிறிது நேரத்திற்குப்பிறகு குமார் போன் செய்தான்,அவனிடம் எல்லா
டீடெய்லயும் கேட்டுக்கொண்டேன். ஒரு வழியாக குமார் கால்லூரியையே என் தம்பிக்கு தேர்வு
செய்தோம்.அலார்ட்மண்ட் ஆர்டர் வாங்கி வெளியே வர மணி 12 ஆகிஇருந்தது.
நாங்கள் இருவரும் கேண்டீன் சென்று சாப்பிட்டு விட்டு வெளியே
வர மணி 1 ஆகிஇருந்தது.
மதியம் என்பதால் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்ததது.
இருக்கும் கூட்டமும் கலந்தாய்வுக்கு வந்தவர்கள்,அனைவரின் முகத்திலும் கல்லூரி தேர்வு
செய்துவிட்ட மகிழ்ச்சி. நாங்கள் தங்கி இருக்கும் சென்னை சென்ரல்க்கு பஸ் ஏறினோம்.பஸ்ல்
கூட்ட்ம் இல்லை,இருவரும் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டோம்.மதியம் என்பதால் சாலை
வெறிச்சோடி இருந்தது.
என் போன் சினுங்கியது,கீதாவிடமிருந்து மெசெஜ் வந்திருந்தது,
”வாட் டூயிங்?” “காலேஜ் எடுத்தாச்சா?”.அப்போதுதான் எனக்கு கீதா ஞாபகம் வந்தது.உடனே
போன் செய்தேன்”
ஹாலோ, கீதா தாங்க்யு சோ மச்.குமார் போன் செய்தான்,அவன் காலேஜ்யே எடுத்தாச்சு”.
அவள், “ஒகே..இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்,,உன்னப்பாத்து எவ்வுளோ
நாள்ச்சு,” என்றாள்.நாங்கள் எந்த கல்லூரி,எந்த கோர்ஸ் என தெரிந்து கொண்டோம்.
ஒரே ஊரில் நான் ஆண்கள் பள்ளியிலும்,கீதா பெண்கள் பள்ளியிலும்
படித்திருந்தாலும், இருவரும் ஒரே டியூசனில் படித்தோம்.கீதா தம்பி குமார் என் பள்ளி
ஜுனியர்,அதனால் எங்கள் இருவருக்கும் பழக்கம்.எனக்கு பெண்கள் மீது அவ்வளவாக ஈடர்ப்பு
கிடையாது,நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்.கீதாவிடம்கூட நான்கு ஐந்து தடவைதான்
பேசி இருப்பேன், கல்லூரியிலும் அப்படிதான் இருந்தேன்.
கீதா, “என்ன ரகு இப்ப ஏதாவது கேள் ப்ரெட்ஸ் இருக்காங்களா? இல்ல
இப்பவும் அப்படித்தானா?” என்றாள்.நான், “ஏய் நான் எப்பவும் போலதான்,நான் உண்டு என்
வேலை உண்டுனு இருக்கேன். நீ எப்படி?” என்றேன். அவள், “நான் எப்பவும் போலதான்,எல்லாரும்
ப்ரெட்ஸ்தான். ஜாலியா போய்ட்டு இருக்கு”, என்றாள்.” ஓகே கீதா..பை..டேக் கேர்..என்றேன்.
அவள்,” ஓகே..ரகு...பை..அடிக்கடி போன்பன்னு என்று சொல்லி கட் செய்தாள்.
பிறகு நானும்
என் தம்பியும் நாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்க்கு சென்று இரவு வரை தங்கி விட்டு இரவு
ரயிலுக்கு ஊர்போய் சேர்ந்தோம்.
Continue to Tomorrow.....
Continue to Tomorrow.....