Translate

Advertising

Thursday, May 1, 2014

Continue...Post-5

நாங்கள் விடுமுறை முடிந்து காலேஜ் போகும் நாள் வந்தது..

நான் பஸ்டாட்டிற்கு சீக்கிரம் வந்துவிட்டேன்...கீதா இன்னும் வரவில்லை...பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் செல்வதால் கூட்டம் அலைமோதியது. உடனே சீக்கிரம் வா என மெசேஜ் செய்தேன்.

“ஓகே...டா செல்லம்..ஐ ம் ஆன் தி வே..” என ரீப்ளே வந்தது..எனக்கு ஒரே குஷி ஆகிவிட்டது.ஏனெனில் இதுவரை கீதா என்னை செல்லம் என கூப்பிட்டது இல்லை.இந்த செல்லம் என்ற வார்த்தை என்னை ஏதோ செய்தது.

நான் இந்த உலகத்திலேயே இல்லை.என்னை அறியாமல் வாய் விட்டுச்சிரித்தேன்.செல்லம் என்பது ஒரு சாதாரண வார்த்தைதான்...ஆனால் அதை அவள் சொன்னது என்னை ஏதோ செய்தது...ஓர் இனம் புரியாத நெருக்கத்தை ஏற்படுத்தியது...நானும் பதிலுக்கு “ஓகே..செல்லம்...சீக்கிரம் வா..”என்றேன்.

கொஞ்ச நேரத்தில் கீதா வந்து சேர்ந்தாள்.அவள் பேருந்தில் சீட்டுப்பிடித்துக்கொடுத்து ஜன்னல் பக்கம் வந்து நின்றேன்...அவள் அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே தேங்க்ஸ் என்றாள்....நானும் சிரித்தேன்..

பிறகு கடைக்குப்போய் ஆனந்தவிகடனும் ஃப்பென்டா அரைலிட்டர் பாட்டிலும் வாங்கிக்கொடுத்தேன்...

”வேண்டாம் ரகு..இதேல்லாம் எதுக்கு என்றாள்.

சும்மா வாங்கிக்கோ இதுல என்ன இருக்கு...என் ஆளுக்கு-னு வாய் வந்தது...என் ப்ரெண்டுக்கு நான் வாங்கித்தரக்கூடாதா என்றேன்...சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள்.

இருவரின் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்துக்கொண்டன..பிறகு டக்கென்று வெளியே பார்பதுபோல் முகத்தை திருப்பிக்கொண்டாள்...அது இருவருக்கும் புதிதாய் இருந்தது.அவளை விட்டுச்செல்ல மனமே இல்லை..

பாழாய் போன இந்த டிரைவர் உடனே வண்டியை கிளப்பி விட்டான்.