நான் காலேஜ் வந்ததும் என் க்ளோஸ் ப்ரேண்ட் வருணிடம் கூறினேன்.
வருண் கலகலப்பான ஜாலிப்பேர்வலி.அவனுக்கு பல பெண் தோழிகள் உண்டு,அவனிடம் பல நண்பர்கள்
ஐடியா கேட்பார்கள்; ஹாஸ்டல் பசங்களிடம் செல்வாக்கானவன்.
வருண் இதை கேட்டுவிட்டு,” டேய்,
மச்சி..நீ சரியான் ஆள்டா...உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு. நீ பாத்து 3 வருசம் இருக்கும்,அதுவும்
பழக்கம் இல்லாத பொண்ணு,தீடீர்னு எதர்ச்சயா அவகூட பேச வாய்ப்பு கிடச்சுருக்குனா, இது
கண்டிப்பா “காட் கேரேஸ்” தாண்டா.எனகே ஒரு பொண்ணுட்டா நம்பர் வாங்க அட்லீஸ்ட் 2 டேஸ் அகும்,பட் உனக்கு தான அமஞ்சு இருக்கு,சோ
மிஸ் பண்ணாதடா”,என்றான்.
நான் குழம்பிப் போனேன். வருண்,” டேய், மறுபடியும் சொல்றென்,நீயா
வழியபோய் அவளிடம் பேச வேணாம்,பட் அவாளாக பேசினால்
அவாய்டு பன்னாத,அள்ளோதான் புடிச்சா லவ் பண்ணு இல்லாட்டி விட்ரு,அப்பறம் உன் இஷ்டம்”,
என்று கூறிச்சென்றான்.
நானும் யோசித்தேன் நாமாக போய் பேசவில்லை,எதர்சையாய் அவளிடம்
பேசுவதுபோல் அமைந்தது அவளா பேசினால் பேசுவோம் இல்லாட்டி விட்ருவோம்,என்று முடிவிற்கு
வந்தேன்.
அன்று மாலையே அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது,“ பேஸ்புக்ல
ப்ரேண்ட் ரிக்வஸ்ட் கொடுத்திருக்கேன் அக்சப்ட் பண்ணு”, என்று வந்திருந்தது.இப்படியே
இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்து நாள்தோறும் போனில் பலமணி நேரம் பேசிக்கொண்டோம்.
வருணுக்கு
ஆச்சரியமாக இருந்தது,ஒருநாள் என்னிடம் கேட்டான்.
என்னடா இப்போ கொஞ்ச நாள போனே கதினு இருக்க...என்ன கீதாவோட கடலயா...நீ
நடத்து நடத்து...இப்போத நீ என் ப்ரேண்டு....நீ ஒருத்தந்தான் நல்லவனா இருந்த இப்போ நீயும்
லவ்தீக வாழ்க்கைக்கு வந்துட்ட..வெரி குட்..வெரி குட்..”,என என்னை என்ங்கிரேஜ் பண்ணினான்.
”டேய்...அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்லடா...அவள் என் மேல எவ்ளோ
கேரா இருக்கா தேறியுமா..நல்லா சாப்புடு,நல்லா தூங்கு,நல்லா படினு சொல்வாடா..எனக்காக
டேய்லி கடவுள்ட வேண்டிக்குறடா....”சி ஸ் சொ கேர் எபவுட் மீடா” என்றேன்.
வருண்,” அப்படியா
மச்சி..ஒகே..ஒகே...எப்படியொ நல்லா இருந்தா சரி” என்றான்.
“டேய்...நீ நேனக்கிற மாதிரி இல்லடா..நாங்க ப்ரேண்ட்ஸ்டா...நான்
எப்போதும் அந்தா லிமிட்ட மீறியது இல்லடா..” வருண், ”அப்படியா பார்கலாம்” என்று சிரித்துக்கொண்டே
சென்றான்.
ஒருநாள் நாங்கள் இருவரும் பேசும்பொழுது சொன்னேன், “கீதா உன்ன
பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு...உன்ன பார்கணும்”. அவள், “அதுக்கென்ன இந்த பொங்களூக்கு
மூணு நாள் லீவ் இருக்குல பார்கலாம்” என்றாள். அந்த நாளுக்காக காத்திருந்தேன்.அவள் எப்படி
இருப்பாள், 3 வருடம் முன்னாடி பார்த்தது.எனக்கே சிரிப்பாய் இருந்தது...ச நாமா இப்படி
ஒரு பெண்ணுக்காக ஏங்குவது...ஆனாலும் அவளை பார்க்க மனம் துடித்தது...ஏன் என்று தெரியவில்லை....இருந்தாலும்
இந்த ஏக்கம் கலந்த துடிப்பு பிடித்திருந்தது...அறிவு வேலை செய்யவில்லை...மனம்தான் வேலை
செய்தது...