Translate

Advertising

Monday, May 5, 2014

Continue...Post-7

பஸ்டாண்டு வந்தது கண்டக்டர் எழுப்பிவிட்டார்...

முழித்ததும் போனைப்பார்த்தும்க்கொண்டே எழுந்தேன்..கண்டக்டர் “தம்பி எழுந்ததும் செல்போன்தான...சீக்கிரம் இறங்குப்பா...வண்டி டெப்போ போகுது” என்றார்.

இறங்கி செல்போனைப்பார்த்தால் கீதாவிடமிருந்து நிறைய மெசேஜ் வந்திருந்தது..அதில் கடைசி மெசேஜ் “ரகு ஐ லைக் யூ டா”. படித்ததும் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

சந்தோஷத்தில் வாயடைத்துப்போய் அங்கேயே அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டேன்..என்ன செய்வது என்று தெரியவில்லை.அங்கு பேருந்து நிலையத்தில் இருந்த அனைவரும் என்னை ஒருமாதிரிப் பார்த்தனர்.

அளவுக்கு அதிகமான சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை.அவளுக்கு என்ன ரீப்ளே செய்வது என தெரியவில்லை.


உடனே வருணிற்கு போன் செய்தேன். “டேய் மச்சி ஒரு மேட்டர்..நடந்ததை கூறினேன்.. அவன், “ மச்சி..சூப்பர்டா...அவளுக்கு உன்னை பிடிச்சுப்போச்சு...பட் பொண்ணுங்க அகராதியில் லைக்-கும் லவ்-கும் ரோம்பவே வித்தியாசம் இருக்கு.. சோ இத நீ லவ்-னு நினைக்க கூடாது..பட் லவ்-கு இதுதான் இனிசியல் ஸ்டேஜ்..அதனால கொஞ்சம் வேய்ட் பண்ணு....லவ்-னு அவள சொல்ல வைக்கணும்.இப்படியெ கண்டினியூ பண்ணு...கண்டிப்பா ஒருநாள் சொல்லுவா..என தன் நீண்ட நேடிய உரையை பேசி முடித்தான். 

எனக்கு உலகமே ஒரு நிமிடம் நின்று விட்டதுபோல் ஓர் உணர்வு.மகிழ்ச்சி வந்த சுவடு இல்லாமல் மறைந்துபோனது.ஆனாலும் அவளுக்கு நாம் பிடித்திருக்கிறோம் என்பது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
Save Fuel Click Here