Translate

Advertising

Wednesday, May 21, 2014

Continue....Post-9

Want to sell...Buy...Rent..Property
“ஓகே லூசு..இனி இப்படி செய்ய மாட்டேன். ஐ மிஸ் யூ சோ மச் “ என ஒரு வழியாய் பேசி அவளை சமாதானம் செய்து போனை கட் செய்தேன். 
Read this story firstly

அவள் என் மீது பாசமாக இருக்கிறேன் என சொன்னதில் வயிறு நிறைந்து விட்டதைபோல் உணர்ந்தேன்.எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி.

சாப்பிட மனம் இல்லாமல் எழுந்துவிட்டேன். சர்வர் ஏன் சார் சாப்பிடாமல் எழுந்திட்டீங்க..நல்லா இல்லையா என்றான்...” இல்லை இல்லை பஸ்க்கு நேரம் ஆகிவிட்டது என சொல்லி பில் கட்டி வெளியே வந்தேன். 

பசியுடன் வந்து சாப்பிடாமல் போனதை நினைத்து சிரிப்பாய் வந்தது..காதலுக்கு இவ்வளவு வலிமையா என்று.மகிழ்ச்சியாய் காலேஜ் போய் சேர்ந்தேன்

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் எனக்கு உடம்பு சரி இல்லை.காலேஜ் போகாமல் ரூமில் ரெஸ்ட் எடுக்கும் போது கீதா அன்பாக பேசி எனக்கு தெம்பூட்டினால்.

எனக்காக கோவில் சென்று வேண்டிக்கொண்டாளாம்,அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது,ஆனால் அப்படி சொல்ல ஒரு நல்ல மனது வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.அவளிடம் எனக்கு பிடித்ததே அவளின் என் மீதான “கேரிங்” தான்.

என் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டாள்.

அன்று அவளிடம் பேசிக்கொண்டே இருந்தேன், என்னை அறியாமல் அவளிடம் “ ஐ லைக் யூ கீதா “என்றேன். 

அவள் “ மீ டூ ரகு “ என்றாள். உண்மையில் இந்த “மீ டூ” என்ற வார்த்தை என்னை குணப்படுத்தியது எனலாம். 

ஐ லைக் யூ என்று சொன்ன என்னால், ஐ லவ் யூ என்று சொல்ல பயமாக இருந்தது. ஒருவேளை அவளுக்கு அப்படி ஓர் எண்ணம் இல்லை எனில்,தவறாகப்போய்டும் என பயந்துகொண்டிருந்தேன்.ஆனாலும் ஒருநாள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.